இந்தாண்டில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையை ஐசிசி தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி, இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த பிரிவில் பாகிஸ்தான், குரூப் ஏ ரன்னர், தென்னாப்பிரிக்க அணி, வங்கதேச அணி, குரூப் பி வின்னர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி யாருடன் மோதும்:
இதில் அக்டோபர் 23ஆம் தேதி, இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அடுத்து 27ஆம் தேதி குரூப் ஏ ரன்னர், 30ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்கொள்ளவுள்ளது. தொடர்ந்து நவம்பர் 2, 6 ஆகிய தேதிகளில் வங்கதேசம், குரூப் பி வின்னர் அணியுடன் மோதவுள்ளது.
குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், குரூப் ஏ வின்னர், குரூப் பி ரன்னர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
அக்டோபர் 16ஆம் தேதி துவங்கும் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் இலங்கை அணி, நமீபியாவை எதிர்கொள்ளவுள்ளது. மொத்தம் 8 அணிகள் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளோடு நமிபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இந்த தகுதிச்சுற்றில் விளையாடும்.. இதில் இரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும்.
சூப்பர் 12:
சூப்பர் 12 சுற்றுக்கு ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன. மேலும், தகுதி சுற்றில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட நான்கு அணிகளும் (A1, A2, B1, B2) இதில் பங்கேற்கும். அக்டோபர் 21ஆம் தேதியோடு தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்து, சூப்பர் 12 சுற்று ஆரம்பாகும்.
சூப்பர் 12
குழு 1 போட்டிகள்
அக்டோபர் 22: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து: பகல் 12:30 – SCG, சிட்னி
அக்டோபர் 22: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் – மாலை 4:30 – பெர்த் மைதானம்
அக்டோபர் 23: A1 vs B2 – காலை 9:30 – ஓவர், ஹாபர்ட்
அக்டோபர் 25: ஆஸ்திரேலியா vs A1 – மாலை 4:30 – பெர்த் ஸ்டேடியம்
அக்டோபர் 26: இங்கிலாந்து எதிராக B2 – காலை 9:30 மணி – எம்சிஜி, மெல்போர்ன்
அக்டோபர் 26: நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் – பிற்பகல் 1:30 – எம்சிஜி, மெல்போர்ன்
அக்டோபர் 28: ஆப்கானிஸ்தான் vs B2 – காலை 9:30 – MCG, மெல்போர்ன்
அக்டோபர் 28: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா – மதியம் 1:30 – எம்சிஜி, மெல்போர்ன்
அக்டோபர் 29: நியூசிலாந்து vs A1 – 1:30pm – SCG, சிட்னி
அக்டோபர் 31 – ஆஸ்திரேலியா vs B2 – மதியம் 1:30 – தி கபா, பிரிஸ்பேன்
நவம்பர் 1: ஆப்கானிஸ்தான் vs A1 – காலை 9:30 – தி கபா, பிரிஸ்பேன்
நவம்பர் 1: இங்கிலாந்து vs நியூசிலாந்து- பிற்பகல் 1:30 – தி கபா, பிரிஸ்பேன்
நவம்பர் 4: நியூசிலாந்து vs B2 – காலை 9:30 மணி – அடிலெய்டு ஓவல், அடிலெய்டு
நவம்பர் 4: ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் – பிற்பகல் 1:30 – அடிலெய்டு ஓவல், அடிலெய்டு
நவம்பர் 5: இங்கிலாந்து எதிராக A1 – 1:30pm – SCG, சிட்னி
குரூப் 2 போட்டிகள்:
அக்டோபர் 23 – இந்தியா vs பாகிஸ்தான் – பிற்பகல் 1:30 – எம்சிஜி, மெல்போர்ன்
அக்டோபர் 24: பங்களாதேஷ் எதிராக A2 – காலை 9:30 மணி – பெல்லரிவ் ஓவல், ஹோபர்ட்
அக்டோபர் 24: தென்னாப்பிரிக்கா vs B1 – பிற்பகல் 1:30 – பெல்லரிவ் ஓவல், ஹோபர்ட்
அக்டோபர் 27: தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ் – காலை 8:30 மணி – SCG, சிட்னி
அக்டோபர் 27: இந்தியா vs A2 – பகல் 12:30 – SCG, சிட்னி
அக்டோபர் 27: பாகிஸ்தான் எதிராக பி1 – மாலை 4:30 மணி – பெர்த் ஸ்டேடியம், பெர்த்
அக்டோபர் 30: பங்களாதேஷ் vs B1 – காலை 8:30 – தி கபா, பிரிஸ்பேன்
அக்டோபர் 30: பாகிஸ்தான் vs A2 – பகல் 12:30 – பெர்த் ஸ்டேடியம், பெர்த்
அக்டோபர் 30: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா – மாலை 4:30 மணி – பெர்த் ஸ்டேடியம், பெர்த்
நவம்பர் 2: B1 vs A2 – 9:30am – அடிலெய்டு ஓவல், அடிலெய்டு
நவ. 2: இந்தியா vs பங்களாதேஷ் – மதியம் 1:30 – அடிலெய்டு ஓவல், அடிலெய்டு
நவம்பர் 3: பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா – பிற்பகல் 1:30 – எஸ்சிஜி, சிட்னி
நவம்பர் 6: தென்னாப்பிரிக்கா vs A2 – காலை 5:30 – அடிலெய்டு ஓவல், அடிலெய்டு
நவம்பர் 6: பாகிஸ்தான் vs வங்கதேசம் – காலை 9:30 மணி – அடிலெய்டு ஓவல், அடிலெய்டு
நவம்பர் 6: இந்தியா vs B1 – பகல் 1:30 – MCG, மெல்போர்ன்
நாக் அவுட்:
நவம்பர் 9: அரையிறுதி 1 – 1:30pm – SCG, சிட்னி
நவம்பர் 10: அரையிறுதி 2 – பிற்பகல் 1:30 – அடிலெய்டு ஓவல், அடிலெய்டு
நவம்பர் 13: இறுதி – மதியம் 1:30 மணி – எம்சிஜி, மெல்போர்ன்.