பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் 6 முன்னாள் முதல்வர்கள் கேபினட் அமைச்சர்களாக உள்ளனர். மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு மத்திய வேளாண் அமைச்சகம் ஒதுக்கப்பட்டதுஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு மின்சாரம் மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (ஹெச்ஏஎம்) தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மஞ்சிக்கு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில் உள்ள மற்ற முன்னாள் முதல்வர்கள் ராஜ்நாத் சிங் (உத்தர பிரதேசம்), சர்பானந்தா சோனோவால் (அசாம்), மற்றும் எச்டி குமாரசாமி (கர்நாடகா). அவர்களின் இலாகாக்கள் பற்றிய விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை.