பிபிசி-யுடனான நேர்காணலில், தமது தாய் டயானா ஏமாற்றப்பட்டதால்தான் அவரது மனநிலை மேலும் பாதித்து அவருக்கும் தனது தந்தைக்கும் இடையே பிணக்கு அதிகரித்தது என கேம்பிரிட்ஜ் கோமகன் வில்லியம் குற்றம் சாட்டியுள்ளார்.

பிபிசி-யின் தரம் தாழ்ந்த செயல் விசாரணையில் உறுதியானதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டது கூட தனது தாய்க்குத் தெரியாது என்பது தனக்கு மிகவும் வேதனையளிப்பதாக கோமகன் வில்லியம் கூறியுள்ளார். தனது தாய் ஒரு முரட்டு செய்தியாளரால் மட்டுமல்லாமல், பிபிசி உயரதிகாரிகளாலும் ஏமாற்றப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். தனது தாயின் மரணத்திற்கு இந்த நச்சுத்தன்மை வாய்ந்த ஊடகக் கலாச்சாரமே காரணம் என சஸ்ஸெக்ஸ் பிரபு தெரிவித்துள்ளார். இளவரசர் ஹாரி, தனது தனி அறிக்கையில், “சுரண்டல் கலாச்சாரத்தின் விளைவுகள் மற்றும் நெறிமுறையற்ற நடைமுறைகள் தனது தாயின் உயிரைப் பறித்துவிட்டன” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற நடைமுறைகள் “இன்றும் பரவலாக உள்ளன” என்று கவலை தெரிவித்த அவர், இது “ஒரு குறிப்பிட்ட நிறுவனம், நெட்வொர்க் மட்டுமல்லாது அதையும் தாண்டியது என்று கூறுகிறார். “இதன் காரணமாகவே எங்கள் தாய் தனது உயிரை இழந்தார், இருப்பினும் இதுவரை எதுவும் மாறவில்லை. அவரது மரபைப் பாதுகாப்பதன் மூலம், நாம் அனைவரையும் பாதுகாக்கிறோம், மேலும் அவர் வாழ்ந்த வாழ்வின் கண்ணியத்தையும் நிலை நிறுத்துகிறோம்” என்று அவர் கூறினார். இளவரசர் வில்லியம், இளவரசர் ஹாரி, வேல்ஸ் இளவரசர், டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் ஆகியோரிடம் பிபிசி மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளது. நேர்காணலை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து முதலில் கேள்வி எழுப்பிய கிராஃபிக் டிசைனர் மாட் வைஸ்லர், பின்னர் பிபிசியால் பணி கொடுக்க மறுக்கப்பட்டார். அவர், ரேடியோ 4-ன் நிகழ்ச்சியில், வியாழக்கிழமை பிரிட்டன் நேரப்படி 22:00 மணிக்குத் தனக்கு அனுப்பப்பட்ட மன்னிப்புக் கடிதம் காலம் கடந்தது என்றும் போதுமானதல்ல என்றும் தெரிவித்தார். அந்த நேரத்தில் உள் விசாரணையை வழிநடத்திய லார்ட் ஹால் மற்றும் தன்னிடம் நேரடியாக மன்னிப்பு கோராத பிபிசி இயக்குநர் ஜெனரல் லார்ட் பிர்ட் ஆகியோரை அவர் விமர்சித்தார்.