கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தைப்பற்றி பேசிய லோகேஷ் கனகராஜ்

உலகநாயகன் கமல் நடிப்பில் சமீபத்தில் படங்கள் ஏதும் வெளியாகவில்லை. கடைசியாக இவரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியானது. அதன் பிறகு கமலின் படங்கள் ஏதும் வெளியாகாததால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தியன் 2 பல பிரச்சனைகளால் கிடப்பில் உள்ளது. அதைத்தொடர்ந்து கமல் டிவி நிகழ்ச்சி, அரசியல் என பிஸியானதால் இனி இவர் படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. அக்கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக கடந்தாண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிப்பதாக கமல் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு துவண்டிருந்த கமல் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை தந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மேலும் இப்படம் ஜூன் 3 ஆம் தேதி திரையில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை பற்றி தற்போது லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். அதாவது மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்கள் லோகேஷ் கனகராஜ் படமாகவே இருந்தது. அதன் பின் மாஸ்டர் படம் பாதி லோகேஷ் படமாகவும் பாதி விஜய் படமாகவும் இருந்து.